×

ஆள்மாறாட்டம் செய்து ரூ.6.5 கோடி நிலத்தை அபகரித்த 4 பேர் கைது

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அசோக் நகரை சேர்ந்த ராதை என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது தாய் பச்சையம்மாளுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள 4,240 சதுர அடி காலி மனை உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு எனது தாய் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த இடம் எனது பாராமரிப்பில் இருந்தது. இதற்கிடையே அந்த இடத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த சிலர், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது சொத்தை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராதைக்கு சொந்தமான இடத்தை வசந்தகுமார் என்பவருக்கு, அவரது கூட்டாளிகளான மாதவரத்தை சேர்ந்த சகாதேவன் (48), கொளத்தூரை சேர்ந்த குமார் (42), மாதவரத்தை சேர்ந்த வடிவேல் (59), முத்துக்குமார் (43) ஆகியோர் பவர் கொடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்து, இடத்தை அபகரித்தது தெரியவந்தது.

மேலும், அந்த இடத்தை சகாதேவன், குமார், வடிவேல், முத்துக்குமார் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து பணம் பெற்று மோசடி ெசய்ததும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து போலீசார் ஆள்மாறாட்டம் மூலம் ரூ.6.5 கோடி இடத்தை அபகரித்து, நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து மோசடி செய்த சகாதேவன், குமார், வடிவேல், முத்துக்குமார் ஆகியோரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்த இடத்திற்கான போலி அவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆள்மாறாட்டம் செய்து ரூ.6.5 கோடி நிலத்தை அபகரித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Radhai ,Ashok Nagar ,Chennai Police Commissioner ,Pachaiammal ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்